Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அசிஸ்டென்ட்

பணியிடங்கள் விவரம்

1. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (பொது): 14 இடங்கள் (பொது-7, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1)

2. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (பைனான்ஸ் மற்றும் அக்கவுன்ட்ஸ்): 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).

3. ஜூனியர் செக்ரடேரியேட் அசிஸ்டென்ட் (ஸ்டோர்ஸ் மற்றும் பர்ச்சேஸ்): 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-2).

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 முதல் 28க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

4. ஜூனியர் ஸ்டெனோகிராபர்: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 27க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், அதை 70 நிமிடங்களில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

www.neeri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2025.