லக்னவ் கான்பூர் திறக்கப்பட்ட 20 நாட்களில் ஐந்து இடங்களில் பள்ளம்!! சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணயம்...
உத்தரப் பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் லக்னவ் கான்பூர் விரைவுசாலை திறக்கப்பட்டு 20 நாட்களில் ஐந்து இடங்களில் பள்ளம் விரிசல் ஏற்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக உள்ளது. மறுசீரமைப்பு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணயம் அறிவித்தாலும் சுங்க விளக்கு கிடைப்பதை விட பாதுகாப்பான மற்றும் தரமான சாலைதான் தேவை என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
பயண நேரத்தை குறைகின்றனர் என பெரும் எதிர்பார்ப்புடன் திறக்கப்பட்ட லக்னவ் கான்பூர் விரைவுச்சாலை ஒரு மழைக்கே தாக்கு பிடிக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பது கட்டுமான தரம் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னவ் கான்பூர் கிரீன்பீல்ட் தேசிய உயர்மட்ட விரைவுச்சாலை 4200 கோடி செலவில் அமைக்கப்பட்டது. 63 km நீளமுடைய இந்த விரைவுச்சாலையை ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நித்தின் கட்கரி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் கடந்த 13 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த சாலை மூலம் லக்னவ் கான்பூர் பயண நேரம் சுமார் 90 நிமிடங்களில்லிருந்து 40 நிமிடங்களாக குறையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மழைக்கே நிலைமை மாறியது. ஜூலை 25ஆம் தேதி சாலையின் ஒரு பெரிய பகுதி உள்வாங்கி சரிந்தது. திறப்பு விழா நடந்து 12 நாட்களை ஆன நிலையில் உண்ணாவ் மாவட்டத்தின் கொராரி கிராமத்திற்கு அருகில் சுமார் 5 முதல் 7 மீட்டர் வரையிலான பகுதி உள்வாங்கி சரிந்தது. அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழுத்தியது.
இதே போன்று ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. முழுமையான சீரமைப்பு பணிகள் நிறைவடைய மூன்று மாதங்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரமான சாலையை அமைக்காத புகாரில் திட்ட மேலாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டதுடன் பணியை மேற்கொண்ட பிஎன்சி இன்பராஸ்ட்ராக்ட் நிறுவனத்திற்கு இனி புதிய திட்டங்கள்
ஒதுக்கப்படாது என தேசிய நெடுஞ்சாலை ஆணயம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க சுமார் 3 கோடி ரூபாய் செலவாகும் என்றும் அந்த செலவினை முழுமையாக பிஎன்சி இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை மறுசீரமைப்பு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தாலும் சுங்கவிலக்கு கிடைப்பதை விட பாதுகாப்பான மற்றும் தரமான சாலைதான் தேவை என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சாலை கட்டுமான தரம் குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் முன் வைத்துள்ளன. சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் யோகி ஆதித்யநாத் அரசு ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.


