Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

வேலூர்: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு வாகனம் உள்பட நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வேலூர் மாநகராட்சியின் அரசு வாகனம் மற்றும் டாடா ஏசி, கார், லாரி ஆகிய 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், டாடா ஏசியின் பின்புறம் அமர்ந்திருந்த வேலூர் சலவன்பேட்டை சேர்ந்த 14 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்ட இரண்டு கார்களுக்கு நடுவே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அரசு வாகனம் உள்பட மொத்தம் நான்கு வாகனங்கள் எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி இந்த விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.

விபத்தின் காரணமாக அந்த தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அலமேலுமங்கபுரம் முதல் சத்துவாச்சாரி வரை நீண்ட தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.