Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

4000 போதை மாத்திரைகள் பறிமுதல்: மதுரவாயலில் 3 பேர் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெற்று வருவதாக கோயம்பேடு காவல் மாவட்ட துணை கண்காணிப்பு குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார், மதுரவாயல், தி.நகர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 4 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தது.

விசாரணையில், சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த பாவேஷ் (23), கண்ணம்மாபேட்டை தினேஷ் (22), எஸ்பி கார்டன் பகுதியை சேர்ந்த சஞ்சய் (21) என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், பணம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் எங்கிருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்தார்கள், இவர்களுடன் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, யார், யாருக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதுசம்பந்தமாக கார்த்திகேயன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.