Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

முட்டையானது நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது நமது கடமை. அதற்கேற்ப காய்கறிகள், முட்டை, பால், பழங்கள் உள்ளிட்டவற்றை நமது அன்றாட உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுவது மிகவும் முக்கியமான ஒன்று.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை நேற்றை நிலவரப்படி 610 காசுகளாக (ரூ.6.10) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று முட்டை கொள்முதல் விலை ரூ.6.20 ஆக(620 காசுகள்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் உயர்ந்துள்ளது. முன்னதாக ஜூலை 31-ந்தேதி 6 ரூபாயாக இருந்த முட்டை விலை, தொடர்ந்து வெகுவாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் முட்டை விலை 6 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.