Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நல்லாட்டூர் சாலையோரத்தில் கழிவுகளால் நோய்தொற்று அபாயம்: அகற்றி சீரமைக்க வலியுறுத்தல்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய நல்லாட்டூர் ஊராட்சி கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் உள்ள வீடுகள், பள்ளிக்கு அருகே உள்ள சாலையோரத்தில் ஏராளமான குப்பை மற்றும் மாடுகளின் சாணக் கழிவுகள் ஆங்காங்கே மலைபோல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் கலந்த காற்றை சுவாசிப்பதன் மூலமாகவும், கொசுக்கள் அதிகரிப்பதால் அப்பகுதி மாணவர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் விஷக் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், நல்லாட்டூர் கிராமத்தில் ஊராட்சி சார்பில் குப்பைக் கழிவுகளை முறையாக சேகரித்து, அவற்றை தரம் பிரித்து சுகாதாரத்தை பேணிக் காப்பதை உறுதிப்படுத்தவும், அவற்றை சுகாதாரத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவும் வருவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, நல்லாட்டூர் கிராமத்தில் குவிந்துள்ள மாட்டு சாண குப்பை கழிவுகளால் டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், இப்பகுதியில் அக்கழிவுகளை முறையாக அகற்றி, அப்பகுதியில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிப்பது, குடிநீர் பரிசோதனை செய்வது போன்ற பணிகளை சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்வதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.