தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருநெல்வேலியுடன் நிறுத்தி விடாமல் நாகர்கோவிலை மையமாக வைத்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

 

Advertisement

நாகர்கோவில்: தென் மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரியை மையமாக வைத்து இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே மண்டலம் சார்பில் பெங்களூரு - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை மதியம் திருநெல்வேலி வந்தடைந்தது. மறுமார்க்கமாக, சனிக்கிழமை மதியம் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெங்களூரு சென்றடைந்தது. தமிழகத்தின் தென் எல்லையான குமரி மாவட்டத்திற்கு இந்த ரயிலை இயக்காமல், மதுரை கோட்டத்தின் தெற்கு எல்லையான திருநெல்வேலியுடன் நிறுத்தி விட்டனர்.

இதே போல் கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்தும், தற்போது கான்பூரில் இருந்தும் மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களையும் திருநெல்வேலியுடன் நிறுத்துகிறார்கள். இந்தச் சிறப்பு ரயில்களைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்கக் கோரி திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகளிடம் குமரி மாவட்ட பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் மதுரை கோட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆனால், ரயில்வே அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இரு கோட்டங்களுக்கும் இடையே உள்ள இதுபோன்ற நிர்வாகச் சிக்கல்களைத் தலையிட்டுத் தீர்க்க வேண்டிய தெற்கு ரயில்வே மண்டல தலைமையகமும் மவுனம் காத்து வருகிறது. பொதுவாக, சிறப்பு ரயில்களை இயக்குவது மற்றும் நீட்டிப்பது என்பது முழுமையாக ரயில்வே மண்டலத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் ரயில்வே வாரியத்தின் தலையீடு தேவையில்லை.

எனவே, இதுகுறித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர், தெற்கு ரயில்வே பொது மேலாளரைத் தொடர்புகொண்டு வலியுறுத்தினால், இந்தச் சிக்கலுக்கு எளிதில் தீர்வுகாண முடியும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகிறார்கள். இது குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகையில், நாகர்கோவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பெல்லார்மின் இருந்த கால கட்டத்தில், இதே போன்று அனைத்து சிறப்பு ரயில்களும் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டு வந்தன. அப்போது அவர் தெற்கு ரயில்வே பொது மேலாளரை நேரில் தொடர்புகொண்டு, குமரி மாவட்டம் வழியாகத் தமிழ்நாட்டின் மதுரை - திருநெல்வேலி மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்துச் சிறப்பு ரயில்களும் கட்டாயம் நாகர்கோவிலில் இருந்தே புறப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பலனாக, அடுத்த சில ஆண்டுகளுக்கு இயக்கப்பட்டு வந்த அனைத்துச் சிறப்பு ரயில்களும் நாகர்கோவிலில் இருந்தே இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தற்போதைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தெற்கு ரயில்வே பொது மேலாளரைத் தொடர்புகொண்டு, அனைத்துச் சிறப்பு ரயில்களையும் நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரட்டை ரயில் பாதை இருப்பதால் இதில் சிக்கல்கள் எதுவும் வராது என்றனர். சமீபத்தில் நாகர்கோவில் வழியாக இயக்கப்பட திருவனந்தபுரம் (கொச்சுவேலி) வேளாங்கண்ணி’ சிறப்பு ரயிலுக்குக் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, பயணிகளின் நலன் கருதி இந்தச் சிறப்பு ரயிலைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குமரி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement