Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நான் முதல்வன் திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற கீழடி மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐஐடியில் படிக்க தேர்வு: முதல்வருக்கு நன்றி

திருப்புவனம்: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று, ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர், சென்னை ஐஐடியில் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியைச் சேர்ந்த அக்பர்அலி - பௌசியா பேகம் தம்பதியின் மூத்த மகன் முகமது பாட்ஷா (17). மாற்றுத்திறனாளியான இவர் கீழடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையும், தொடர்ந்து கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்தார். இவர் பிளஸ் 2 தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார்.

கடந்த மே மாதம் நடந்த பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் 239 மதிப்பெண்கள் பெற்று மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டு பிரிவில் தேசிய அளவில் 88வது ரேங்க் பெற்றார். இதையடுத்து அவர், சென்னை ஐஐடியில் பிடெக் மெட்டாலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல் இன்ஜினியரிங் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவரை பள்ளி தலைமையாசிரியர் மதுசூதனன், ஆசிரியர் விஸ்வநாதன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் பாராட்டினர்.

இதுகுறித்து மாணவர் முகமது பாட்ஷா கூறுகையில், ‘‘ஈரோட்டில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த ேஜஇஇ தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் 45 நாட்கள் கலந்து கொண்டேன். இத்தேர்வில் வெற்றி பெற நான் முதல்வன் திட்டம் பெரிதும் உதவியது. தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி’’ என்றார்.