தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசப்பக்தி உணர்வை வௌிப்படுத்தும் விதமாக மைசூர் ‘பாக்’கிலிருந்த பாக் நீக்கம்: மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றம்

Advertisement

ஜெய்ப்பூர்: தேசபக்தி உணர்வை வௌிப்படுத்தும் விதமாக இந்தியர்களின் பாரம்பரிய இனிப்பான மைசூர் பாக்-கிலிருந்த பாக் நீக்கப்பட்டு, மைசூர் ஸ்ரீ என மறுபெயரிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் காரணம் என குற்றம்சாட்டிய ஒன்றிய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை அழித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் மீதான கடும் கோபத்தின் விளைவாகவும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்தியர்கள் மிக விரும்பி சாப்பிடும் இனிப்பு வகையான மைசூர் பாக்-கின் பெயர் மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், மோத்தி பாக் - மோத்தி ஸ்ரீ, ஆம் பாக் - ஆம் ஸ்ரீ, கோந்த் பாக்- கோந்த் ஸ்ரீ, என மறுபெயரிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் உள்ள இனிப்பு கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் கூறுகையில், “நமது சுவையான உணவுகள் நம் தேசத்தின் பெருமையையும் பிரதிபலிக்க வேண்டும். தேசபக்தியின் உணர்வு நம் எல்லைகளில் உள்ள வீரர்களிடம் மட்டுமல்ல, இந்தியர் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.

இதனால் தற்போது பாரம்பரிய இனிப்புகளின் பெயர்களில் இருந்த பாக் என்ற பெயர் ஸ்ரீ என மாற்றி உள்ளோம். இந்த முடிவு மொழியில் சார்ந்தது இல்லை. உணர்வுப்பூர்வமானது. வாடிக்கையாளர்கள் இந்த பெயர் மாற்றத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்” என்று தெரிவித்தார்.

Advertisement

Related News