கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு எனக்கு ஒரு பிள்ளை என் பெயரையோ, பாமக பெயரையோ அன்புமணி பயன்படுத்தவே கூடாது: ராமதாஸ் மீண்டும் தடை
திண்டிவனம்: கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு எனக்கு ஒரு பிள்ளை. என் பெயரையோ, பாமக பெயரையோ அன்புமணி பயன்படுத்த கூடாது என்று ராமதாஸ் மீண்டும் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழ்நாடே ஆவலோடு எதிர்பார்த்த வழக்கு, பாமக சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு.
பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு ஆஜராகி வாதிட்டார்கள். அதில் நாங்கள் (பாமக) வெற்றி பெற்றுள்ளோம், நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதை எல்லாம் சொல்வதற்கு வெட்கமாக உள்ளது. எங்கள் கட்சியையே மீட்க போராடும் நிலை. பாமகவை உருவாக்கியவர் நான். 46 ஆண்டுகள் உழைத்தவரை அசிங்கமாக பேசுவதா? கண் தெரியவில்லை. காது கேட்கவில்லை என்ற கூறுவதா? என்னைப் பற்றி பேச அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை.
கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு எனக்கு ஒரு பிள்ளை. என் பெயரை, என் புகைப்படத்தை அவர் போடக் கூடாது. கட்சி பெயரையோ கொடியையோ பயன்படுத்த கூடாது என உறுதியாக சொல்லி கொள்கிறேன். பாமகவிற்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்த உரிமையும் அவருக்கு கிடையாது. வேறு கட்சியை ஆரம்பித்துக் கொள் அல்லது வேறு கட்சியில் இணைந்து கொள். இவ்வாறு அவர் கூறினார்.


