Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் முதன்முறையாக ரோபோடிக் சர்ஜரி அறிமுகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ சாதனைகள் புரிந்து வரும் இந்த மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுக விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை முறையினை தொடங்கி வைத்தார். அவருக்கு ரோபோட்டிக் சிகிச்சை செயல்பாடுகளை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் விளக்கி கூறினார்.

அறுவை சிகிச்சையின் போது,உடலில் ரத்தபோக்கு விரையம், தசைகள் சேதம் மற்றும் நேர விரையம் போன்றவற்றை குறைக்கும் வகையில் ``மியாட் இன்ஸ்ட்டியூட் ரோபோடிக் சர்ஜரி சிஸ்டம்” உருவாக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்கு பின் இந்த சிகிச்சை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மியாட் ரோபோடிக் மருத்துவ அறுவை சிகிச்சை மருத்துவர்களான செந்தில்குமார், மணிகண்டன் மற்றும் பெருங்கோ ஆகியோர் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது:

ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் உடலில் மார்பு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அனைத்து பெரிய புற்றுநோய்கள் மற்றும் உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் அறுவை சிகிச்சைகள், சிறுநீரகம், நுரையீரல், கருப்பை நீக்கம், தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகள் என உச்சி முதல் கால்கள் வரையிலான 140 வகையான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை வாயிலாக மருத்துவ செலவும், கட்டணமும் சாதாரண அறுவை சிகிச்சையை விட மிகவும் குறைவாக உள்ளது.

மணிக்கணக்கில் அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவர்கள் சோர்வடைவார்கள். ஆனால் ரோபோடிக் சிகிச்சையில் நேர விரையம் குறைகிறது. மருத்துவர்கள் மருத்துவ உபகரணங்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் போதும், நுண்துளை அறுவை சிகிச்சை முறையிலான ``எண்டோஸ்கோப்பிக்” சிகிச்சை முறையிலும் நோயாளிகளின் திசுக்கள் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்படும். ரத்தபோக்கும் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த சிகிச்சையின்போது விஷன் எனப்படும் பார்வை தெளிவாக, துல்லியமாக தெரிவதால், தசைகள் சேதம் ஏற்படாமலும் ரத்தப்போக்கு இல்லாமலும், மிக துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது.

அறுவை சிகிச்சையின்போது ``ரோபோடிக்ஸ் அசிஸ்டட் இன்ட்ரா ஆபரேட்டிவ் அல்ட்ராசவுண்ட் சிஸ்டம்” என்ற கருவி வாயிலாக, உடற்கூறியியல் விவரங்களுடன் தெளிவான படங்களை அனைத்து கோணங்களிலும் முழு ரோபோ அசைவுடன் படம் பிடிக்கப்படுகின்றன. இது, உடலில் உள்ள கட்டிகள் மலக்குடல் அமைந்துள்ள இடுப்பு போன்ற கடினமான பகுதிகளில் கருவி எளிதாக நுழைய முடிகிறது.

அறுவை சிகிச்சையில் ஏற்படும் பெரிய, நீண்ட கால வடு, வலி இதில் இல்லை. திசுக்களில் ஏற்படும் பக்கவாட்டு பாதிப்பையும் இது தடுக்கிறது. மியாட் மருத்துவமனையில் இதுவரை 3 ரோபோடிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும் இந்தமுறை சிகிச்சைக்கு மருத்துவ காப்பீடு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.