Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி 16ம் தேதி பேரணி: எஸ்டிபிஐ மாநில தலைவர் பேட்டி

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திட வேண்டும், பல்லாண்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வாக்குறுதிபடி தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும் ஆகிய இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி சென்னையில் பேரணியை எஸ்டிபிஐ கட்சி நடத்துகின்றது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச் செயலாளர்கள் அஹமது நவவி, நிஜாம் முஹைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநில செயலாளர்கள் அபூபக்கர் சித்தீக், ஏ.கே.கரீம், ராஜா உசேன், பொருளாளர் அமீர் ஹம்சா கலந்து கொண்டனர்.