தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலுக்கு இடையூறு பாலில் விஷம் கலந்து கொடுத்து ஒன்றரை வயது குழந்தை கொலை: கொடூர தாய் கைது

 

Advertisement

சேலம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை, பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து கொலை செய்த கொடூர தாயை, 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி திருமலை வாசுதேவன் (29). இவரது மனைவி லலிதா (21). இவர்களுக்கு 5 மற்றும் ஒன்றரை வயதில் 2 மகன்கள். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். லலிதா ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் லலிதாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10ம் தேதி, ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி, லலிதா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையை வாங்கிச் சென்று லலிதா அடக்கம் செய்து விட்டார். இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தலைவாசல் போலீசார், லலிதாவை அழைத்து விசாரணை மேற்கொண்டார். இதில், கள்ளக்காதலனுடன் தனிமையில் இருப்பதற்கு இடையூறாக இருந்ததால், தனது குழந்தைக்கு பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும், பின்னர் வலிப்பு வந்தது போல் நாடகமாடி, உறவினர்களை நம்ப வைத்ததாகவும் போலீசாரிடம் லலிதா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை, பெற்ற தாயே பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement