Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

முரசு புயல் காரணமாக இன்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்: சென்னை, திருவள்ளுரில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் துரை பேட்டி

சென்னை: முரசு புயல் காரணமாக இன்று மாலை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும். சென்னைக்கு மிக அருகில் முரசு புயல் உள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளுவரில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக அளவில் தாழ்வு மண்டலம் உருவாகும். நவ.15ம் தேதி வாக்கில் புயல் உருவாகி தமிழ்நாட்டை நோக்கி வரும். தமிழ்நாட்டில் நேற்று 7 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. தீபாவளியின் போது தமிழ்நாட்டில் மழை பெய்யும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள இந்தத் தீவிர புயல், சென்னைக்கு வடகிழக்கே சுமார் 150 - 170 கி.மீ தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்று நள்ளிரவு 11:30 மணி முதல் நாளை அதிகாலை 4:00 மணிக்குள் இந்த புயல் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவின் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே இப்புயல் கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் போது ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 120 கி.மீ வேகம் வரையிலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.

புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வட தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை மற்றும் வருவாய் நிர்வாகத் துறை எச்சரித்துள்ளது.