Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முரசு புயல் எதிரொலி: ஆந்திராவில் 29 ரயில்களின் சேவை பாதிப்பு!

முரசு புயல் காரணமாக ஆந்திராவில் 29 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட சார்மினார் விரைவு ரயில், நள்ளிரவு 1.46 மணி முதல் சிராலா - ஓங்கோல் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். காலை 8 மணிக்கு சென்னை வந்தடைய வேண்டிய ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புயல் தாக்கம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விஜயவாடா செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.