Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுகவின் முன்னோடிகளில் ஒருவருமான முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகை மாவட்டம், திருக்குவளையில் கலைஞர் இல்லத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் உள்ள முரசொலி மாறன் உருவப்படத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் ரேவதி வீரபத்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அமைப்பாளர் சதீஷ்குமார், காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் படத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், தொகுதி பொறுப்பாளர் டாக்டர் மாசிலாமணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு அமைச்சர் பொன்முடி, மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், சிவா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி முகாம் அலுவலகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது தலைமையில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் முரசொலி மாறன் உருவப்படத்திற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், மத்திய மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன், முன்னாள் எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை எம்பி முரசொலி, எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், மேயர் சன் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில், கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகை முன்பு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறன் படத்திற்கு, சுற்றுலாத்துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான வக்கீல் ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சேலம் பூலாவரி திமுக கிளை அலுவலகம் முன் அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்பி தலைமையில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ராமலிங்கம் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தலைமையில் திமுகவினர் முரசொலி மாறன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புதுச்சேரி மாநில திமுக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலி மாறனின் படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில், அவைத்தலைவர் எஸ்பி சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத் மற்றும் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.