சென்னை: முரசொலி மாறன் நினைவு நாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், டெல்லியில் கழகத்துக்கும், உலக அரங்கில் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்த பண்பின் திருவுருவம் முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாள்! தலைவர் கலைஞர் மீது கொண்ட தூய அன்பு, ஒப்பிலா அறிவுக்கூர்மை, மாறாக் கொள்கை என எடுத்துக்காட்டாக வாழ்ந்து நிறைந்த அவரது பணிகளை நன்றியுடன் இந்நாளில் போற்றுகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement


