Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நகராட்சி ஆணையர்கள் 10 பேர் பணியிட மாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி ஆணையர்கள் 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு அவ்வப்போது ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், செயலாளர்கள் மற்றும் ஆணையர்களை மாற்றம் செய்து வருகிறது. இதேபோல் காவல்துறை அதிகாரிகளும் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 10 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு : உதகைமண்டலம் நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராகவும், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் முஸ்தபா தருமபுரிக்கும், திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன் திருவள்ளூருக்கும், வால்பாறை நகராட்சி ஆணையர் ரகுராமன் வாணியம்பாடிக்கும், ராசிபுரம் நகராட்சி ஆணையர் கணேஷ் அறந்தாங்கி நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர் பவானி நகராட்சி ஆணையராகவும், பவானி நகராட்சி ஆணையராக இருந்த மோகன் குமார் கோத்தகிரிக்கும், உசிலம்பட்டி நகராட்சி ஆணையர் சக்திவேல் மேலூருக்கும், உளூந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் இளவரசன் உசிலம்பட்டிக்கும், பொன்னேரி நகராட்சி ஆணையர் புஸ்ரா உளூந்தூர்பேட்டை நகராட்சி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.