தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

180 பேரை பலி கொண்ட மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 குற்றவாளிகளும் விடுதலை: ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு!!

Advertisement

மும்பை: கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மும்பையில் பல்வேறு புறநகர் ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்ட குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. 7 ரயில்களில் இந்த குண்டுகள் வெடித்தன. இந்த பயங்கர சம்பவத்தில் 180 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக் விசாரணை நடத்திய மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வாகித் ஷேக் என்ற குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து 12 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு மீது நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்திக் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரணை நடத்தி நேற்று அளித்த தீர்ப்பில்", 12 பேர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பினர் நிரூபிக்கத் தவறிவிட்டனர்.குற்றம்சாட்டப்பட்ட பலர் ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளனர். ஆனால் சித்ரவதை செய்யப்பட்டு இந்த ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டதாக தெரிகிறது. விசாரணையின் போது தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதை குற்றவாளிகள் நிரூபித்துள்ளனர். அதே நேரத்தில் குற்றவாளிகள் நிரபராதிகள் என்று எதிர்த் தரப்பினர் சந்தேகம் இன்றி நிரூபித்துள்ளனர். இதனால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிடுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கமால் அன்சாரி அப்பீல் மனு மீதான விசாரணையின் போது இறந்துவிட்டார்.

இந்த நிலையில், மும்பை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை வரும் 24ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுவை அவசரப் பட்டியலில் சேர்த்து விசாரிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொணட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு பட்டியலிட்டது.

Advertisement