திருவனந்தபுரம்: கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் கேரள முதல்வர் வி.டி.சதீசன் நிருபர்களிடம் கூறியது: கேரளத்தில் பெய்த மழைக்கு இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயமடைந்தனர். 4 பேரை காணவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தற்போது அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விரைவில் தமிழக, கேரள மாநில முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கேரளம் எதிர்ப்பு: கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மோன்ஸ் ஜோசப் நேற்று கூறியது: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.

