Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

முளைகட்டிய தானியங்களும்…முக்கியப் பயன்களும்!

மது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆதலால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிரம்பியதாகவே இருக்க வேண்டும். முளைகட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்தும், புரோட்டீன் நிறைந்த ஒரு இயற்கையான உணவு.

பருப்புகள், கடலைகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைகட்டலாம். முளைகட்டல் மூலம் அவற்றின் கனிமப்பொருள் உள்ளிழுக்கப்பட்டு புரோட்டீன், வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கின்றன.முளைகட்டல் முறையில் அவற்றில் இருக்கும் ஜீரண பிரச்னைகளை உண்டாக்கும் ப்ஹைடெட் போன்ற ஆன்டி-நியூடிரியன்ட் பொருட்களை குறைக்கச் செய்யும்.அவற்றில் உள்ள கடினமான ஸ்டார்ச் பொருட்களை குறைத்து ஜீரணத்திற்கு உதவி புரியும் நொதிகளை உருவாக்கச் செய்கின்றது. முளைகட்டல் என்பது தானியங்களையும் பருப்புகளையும் தண்ணீரில் வெகு நேரம் ஊறவைப்பதுதான் ஆகும்.பாதாம் போன்றவற்றை முளைகட்டுதல் மூலம் அவற்றில் ஒளிந்திருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வெளியில் கொண்டு வரப்படுகின்றன.பாதாம் பருப்பை முளைகட்டும்போது லிபெஸ் என்னும் ஜீரணத்திற்கு உதவிபுரியும் நொதியை உருவாக்கி நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கச் செய்கிறது.கொள்ளு, முள்ளங்கி விதை, ப்ராக்கோலி மற்றும் சோயா போன்றவைகளை முளைகட்டுவது மூலம் அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கூட்டுப் பொருள் உருவாகின்றன.

இவற்றில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயது முதிர்ச்சியை குறைக்கச் செய்கின்றன. முளைகட்டிய தானியங்கள் எளிதாக கிடைக்கக் கூடிய விலைகுறைவான பொருளாகும்.பச்சைப் பயறு, கடலை பருப்பு, கொண்டைக்கடலை, அவரை விதை, காய்ந்த பட்டாணி போன்றவை நமது நாடு முழுவதிலும் எளிதாக கிடைக்கக் கூடிய தானியங்களாகும். பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் முளைகட்டிய பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர்.இவை அனைத்திலும் முளைகட்டிய குதிரைக்கொள்ளு அதிகமான பலன்களை கொடுக்கும். இதில் மாங்கனீஸ், வைட்டமின் ஏ,பி,சி,டி,ஈ,கே மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

முளைகட்டிய தானியங்களின் சுகாதார பலன்கள்:

பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களைக் காட்டிலும் முளைகட்டிய தானியங்களில் ஏராளமான நொதிகள் உள்ளடங்கியுள்ளது என்று நிரூபணமாகியுள்ளன.அதிக புரோட்டீன் நிறைந்துள்ள நொதிகள் எனப்படுவது நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து வைட்டமின், மினரல், அமினோ அமிலம், தேவையான கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றை எடுக்கும் ஊக்கிகளாகின்றன.விதைகள், கடலைகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றை முளைகட்டுவதன் மூலம் அதில் இருக்கும் புரோட்டீன்களின் தரம் அதிகரித்து ஊட்டச்சத்தை அளிக்கின்றன.முளைகட்டிய தானியங்களில் உள்ள சிலவகையான அமினோ அமிலங்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கின்றன.முளைகட்டுவதன் மூலம் உடல் எடை குறைப்பு மற்றும் ஜீரணத்திற்கு உதவும் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கின்றன. நார்ச்சத்தானது நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச்சத்தையும் நச்சுப்பொருட்களையும் நீக்குவதற்கு உதவுகின்றன.முளைகட்டும் முறையால் அவற்றில் உள்ள பலவகையான வைட்டமின்கள் அதிகரிக்கின்றது. குறிப்பாக வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ வகைகள் அதிகரிக்கின்றது.முளைகட்டும் முறையால் சிலவற்றில் இருக்கும் வைட்டமின்களின் அளவு 20 மடங்கு அதிகரிக்கின்றது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

ஒழுங்கற்ற டயட் முறையால் ஏற்படும் அமினோ அமிலக் குறைபாடுகள் இப்பொழுது அதிகரித்துவருகின்றது.முளைகட்டல் முறையால் மெட்டபாலிசத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிகரிக்கின்றன.முளைகட்டிய தானியங்களில் உள்ள இன்றியமையாத கனிமப்பொருட்கள் நமது உடலுக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.முளைகட்டிய தானியங்களில் அல்கலைன் கனிமப் பொருட்களான கால்சியம், மக்னீசியம் போன்றவைகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. இவை ஜீரண சக்திக்கு பெரிதும் உதவுகின்றன.

பெண்களுக்கு பல நன்மைகள் உண்டு

முளைகட்டல் மூலமாக அவற்றில் ஒளிந்திருக்கும் ஏராளமான சக்திகள் வெளிவந்து நமது உடலில் வந்தடைகின்றன.பாதாம் பருப்பை முளைகட்டும் போது லிபெஸ் என்னும் ஜீரணத்திற்கு உதவி புரியும் நொதியை உருவாக்கி நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கச் செய்கிறது. குறிப்பாக பெண்கள் முளைகட்டிய தானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ள கருப்பை வளமை பெறும். கருத்தரித்த பெண்கள் முளைகட்டிய பயிர்களை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது உடலின் கொழுப்பை ஏற்றாமல் அல்லது பருமனாக்காமல் சக்தியை அதிகரிக்கும். பொதுவாக அசைவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இப்படி முளைகட்டியப் பயறுகளைக் கொடுக்க குழந்தையின் எடையிலும் மாற்றம் அதிகமாக தென்படாமல் ஆரோக்கியம் அதிகமாகும். ஏனெனில் குழந்தை எடை அதிகரித்தால் பிறப்பின் போது குழந்தை வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். போலவே ஜீரணக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு உடலின் யூரிக் ஆசிட் பிரச்னைகள் சீராகும். இதனால் கால் வீக்கம், எலும்பு வலிகள் குறையும். முளைகட்டிய உளுந்தை கஞ்சி செய்து கொடுக்க இடுப்பெலும்பு பலம் பெறும். மேலும் மாதவிடாய் கால பிரச்னைகள் பலவும் நீங்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ்.