டெல்லி: எந்த தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகிறார் என்று இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவித்த 14 நாட்களிள் இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வது பற்றி அறிவிக்க வேண்டும். அவகாசம் இன்று முடிவடையும் நிலையில் எந்த தொகுதியில் எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்கிறார் என்று தெரியவரும்.