Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 பேரை திருமணம் செய்து வைத்த கொடூரம்; விபச்சாரத்தில் தள்ள முயன்ற தாயை எரித்துக்கொன்ற மகள்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

திருமலை: ஆந்திராவில் 4 பேரை திருமணம் செய்து வைத்த நிலையில், விபச்சாரத்தில் தள்ள முயன்றதால், தாயை அவரது மகளே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், சட்டெனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவரது கணவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் சில ஆண்டுகளுக்கு முன் மாயமாகிவிட்டார். மகள் லட்சுமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயவாடாவை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இதனால் ரமாதேவி சட்டெனப்பள்ளியில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 7ம்தேதி மாலை ரமாதேவி தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில் ரமாதேவிக்கு அவரது மகள் லட்சுமி தூக்க மாத்திரை கொடுத்து மயங்கியதும்பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லட்சுமியை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமி அளித்த பரபரப்பு வாக்குமூலம்: நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே, எனது தாயார் ரமாதேவியின் நடத்தை சரியில்லை. இதனால் எனது தந்தை தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் எனது தாய் தொடர்ந்து தவறான நடத்தையில் இருந்து வந்தார். இதனால் எனது அண்ணனும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தாயின் நடத்தை காரணமாக எனக்கு இதுவரை 4 முறை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் எனது கணவர்கள், தாயின் நடத்தை காரணமாகதான் என்னை பிரிந்து செல்வதாக கூறுவார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எனது கணவரை பிரிந்துவிட்டு வந்து விபச்சாரம் செய்யுமாறு என்னை வற்புறுத்தி வந்தார். நான் மறுத்ததால் என்னை துன்புறுத்தினார். விபச்சாரத்தில் ஈடுபட்டால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், எனது தாயை கொல்ல முடிவு செய்தேன். அதன்படி கடந்த 8ம் தேதி மயக்க மாத்திரைகளை டீயில் கலந்து கொடுத்தேன். அதை குடித்த அவர், சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். பின்னர் பெட்ரோல் வாங்கி வந்து தூங்கிக்கொண்டிருந்தவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விபச்சாரத்தில் தள்ள முயன்ற தாயை மகள் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.