Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது எனவும் இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் வழங்கியுள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “அரசின் பரிந்துரையின்பேரில், 2026ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள், ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக 2026 ஜூலை 20 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 13 வரை நடைபெறும்” என பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. அதன்படி மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் 130வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா, மே வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.