Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் பருவமழை: பல இடங்களில் வெள்ளப்பெருக்கு

மும்பை: குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஜுனாகத் மாவட்டத்தின் மங்க்ரோலில் 14 மணி நேரத்தில் 56 சென்டிமீட்டர் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மெசானா, வல்சாத், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்களில் 15 முதல் 25 cm வரையிலும் பதிவாகியுள்ளது. பதிவாகியுள்ளது. சூரத் நகரில் பெய்த கனமழையால் தபை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது.

பர்த்தோலி அருகை உள்ள போதான் கிராமத்தில் பெய்த கனமழையில் பவியா ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக மாற்று சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சாலையில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக அவர்கள் கூறினர். மத்திய பிரதேசத்திலும் தொடர்ந்து நான்கு நாட்களாக பருவமழை கொட்டி வருகிறது. உஜைன், கர்கோன், அஷ்டா உலிட்ட இடங்களில் 10 முதல் 21 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பல இடங்களிலும் மழை வெழுத்து வாங்குகிறது. உஜைன் காதிலோதா பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

ஹரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, யமுனா நகர் மற்றும் குருசேத்திரா மாவட்டங்களிலும் மழை வெழுத்து வாங்கியது. அம்பாலா நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் குளம் போல தண்ணீர் கேரளா, தெலுங்கானா மாநிலத்தின் பல இடங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களில் அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.