புதுடெல்லி: பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்ட ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வது டெல்லி உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தகவல் உரிமை ஆர்வலர் நீரஜ் உள்ளிட்டோர் டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்பு கோரும் மனுக்களுக்கு டெல்லி பல்கலைகழகம் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.
+
Advertisement
