சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சித் தலைவர்கள் அதிகமான கூட்டங்களையும், மக்கள் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜ தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகம் வர தொடங்கியுள்ளனர். அவர்களால் பெரிய அளவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாவிட்டாலும் ஒரு சில ஆலோசனை கூட்டங்கள் என்ற பெயரில் தமிழகத்திற்கு வந்து பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக வருகிற 19ம் தேதி கோவைக்கு பிரதமர் மோடி வருகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதேநேரத்தில் அவரை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேரம் கேட்டுள்ளார்.
இதனால் அவர் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுக போட்டி தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் மோடியை சந்திக்க இதுவரை நேரம் கேட்கவில்ைல. ஆனால் நேரம் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரதமர் மோடியின் வருகை பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
