Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்; 5 முறை கருகலைப்பு செய்த எம்எல்ஏ: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

திருமலை: இளம்பெண்ணை ஜனசேனா கட்சி எம்எல்ஏ ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி 5 முறை கருகலைப்பு செய்துள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ரயில்வே கோடூர் தொகுதியின் ஜனசேனா கட்சியின் எம்எல்ஏ ஆரவஸ்ரீதர். இவர் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு இளம்பெண் புகார் அளித்தார். அதில், ஆரவஸ்ரீதர் என்னை கடந்த ஒன்றரை ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் கருவுற்ற என்னை 5 முறை மிரட்டி கருக்கலைப்பு செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் திருப்பதி எஸ்பிக்கு, எம்எல்ஏ ஆரவ ஸ்ரீதர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், ரயில்வே கோடூர் காவல் நிலையத்தில், எம்எல்ஏ ஆரவ ஸ்ரீதர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.