கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ராயல் பொன்னி ரக நெல் மூட்டை ரூ.1,782க்கு விற்பனை
கலவை : ராணிப்பேட்டை மாவட்டம், கலவை- வாழைப்பந்தல் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு கலவை மற்றும் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளையும் நெல் மற்றும் உளுந்து, துவரை, வேர்க்கடலை உட்பட பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
அதன்படி, நேற்றும் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஏராளமான நெல் மூட்டைகள் விற்பனை வந்தன.
75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு: கோ- 51 ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,462க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,282க்கும், குண்டு ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,535க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,410க்கும், ரித்திகா ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,529க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,482க்கும், மகேந்திரா ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,489க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,486க்கும், ஆர்என்ஆர் ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,563க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,429க்கும், என்எல்ஆர் ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,489க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,469க்கும், ராயல் பொன்னி ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,782க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,559க்கும், ஸ்ரீ ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,659க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,566க்கும், கிருஷ்ணா- 201 ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.1,559க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.1,556க்கும் நேற்று விற்பனையானது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.