தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீஞ்சூர் அருகே பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து முற்றிலும் நாசம்: பல லட்சம் பொருட்கள் சேதம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த தத்தமஞ்சி அருகே வஞ்சிவாக்கம் செல்லும் வழியில், ஆரணியாற்றங்கரையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த டேனியல் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இக்குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. மேலும், குடோனில் இருந்த இயந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களிலும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதிலும் கரும்புகை மண்டலம் போல் சூழ்ந்தது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் தண்ணீரை ஊற்றி, பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

Advertisement

இதுகுறித்து பொன்னேரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து, பிளாஸ்டிக் குடோனில் பரவியிருந்த தீயை பலமணி நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். இவ்விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் தீப்பிடித்ததால், அவை அனைத்தும் பலத்த சேதமடைந்தன.

பின்னர் இன்று காலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடி, பிளாஸ்டிக் குடோனில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும், அந்த பிளாஸ்டிக் குடோன் எரிந்து கருகிய நிலையில் பெருமளவில் நாசமடைந்து விட்டன. எனினும், இக்குடோனை சுற்றிலும் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தடுக்கப்பட்டது. இப்புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்ததா அல்லது வேறு யாரேனும் நாசவேலையில் ஈடுபட்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News