Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வெளியுறவு அமைச்சகம் தகவல் இந்திய - அமெரிக்க இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து

புதுடெல்லி: இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளன. ஒருசில குறிப்பிட்ட விஷயங்கள் மட்டுமே இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.

இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய இரு நாடுகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார். இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக , அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின்உயர்மட்டக் குழு கடந்த ஜூன் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.