Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அமைச்சர் பதவி முக்கியம் அல்ல: வன்னியரசு பேச்சு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், அமைச்சரும் விசிக மாநில துணைப் பொதுச்செயலாளருமான வன்னியரசு பேசியதாவது:

விசிக என்பது மற்ற சராசரி அரசியல் கட்சிகளைப் போன்றது அல்ல, இது சமூக விடுதலைக்கான ஒரு பேரியக்கம். தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் சாதி ஒழிப்பு களத்திலும், தமிழ்த்தேசிய களத்திலும் சமரசமின்றிப் போராடும் இயக்கம். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் போன்ற பதவிகளை விடவும், விடுதலைச் சிறுத்தை என்ற அடையாளமே எங்களுக்கு பெருமை சேர்க்கும் நிரந்தரமான மற்றும் அதிகாரமிக்க பதவியாகும்.

இன்றைக்கு அமைச்சராக இருக்கும் ஒருவர் நாளை இல்லாமல் போகலாம். எங்களைப் பொறுத்தவரை அமைச்சர் பதவியா அல்லது சாதி ஒழிப்பு களமா என்றால் சாதி ஒழிப்பு களம் தான் முக்கியம். அமைச்சரா அல்லது தமிழ்நாட்டு இறையாண்மையைப் பாதுகாக்கும் களமா என்றால் எங்களுக்குத் தமிழ்நாட்டு இறையாண்மையைப் பாதுகாக்கும் களம் தான் முதன்மையானது. இவ்வாறு அமைச்சர் வன்னியரசு பேசினார்.