சென்னை : எத்தனையோ மாநிலங்களில் ஆசிரியர்கள் இருந்தாலும், தமிழ்நாடு ஆசிரியர்கள் திறன் மிக்கவர்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், "வரலாற்றில் இல்லாத அளவில் கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் 98.8% மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர், "இவ்வாறு தெரிவித்துள்ளனர்.