போக்குவரத்து ஊழியர்கள் போனஸ் தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது :அமைச்சர் சிவசங்கர் கண்டனம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருகின்ற நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு வட்சத்து 13 ஆயிரத்து 741, C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு, அரசு ஆணை எண்: 310, நிதித் துறை நாள்: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்: 124, போக்குவரத்துத் துறை நாள்: 25/10/2024 ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்தும், அறியாததுபோல மருத்துவர் சராமதாஸ் அவர்கள் X-தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தைசார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின்செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக
அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.