புதுச்சேரி கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இலவச பேருந்து இயக்க நடவடிக்கை: அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது. இதில் கலந்துகொண்டு மாணவிகளுக்கான சேர்க்கையை கல்வியமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்.
இதில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி மாணவர்களுக்கு இயக்கப்படுவது போல கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புற கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கும் இலவச பேருந்து சேவை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், கிராமத்திலிருந்து அதிகளவில் மாணவிகள் கல்லூரிக்கு கல்வி கற்க வருகிறார்கள். காலையில் எழுந்து வரவேண்டியுள்ளது. கிராமங்களில் இருந்து புதுச்சேரிக்கு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையில் உள்ளதுபோல் இலவசப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு அரசே காலை உணவு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வெகு விரைவில் அரசே கல்லூரி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க இருக்கிறது. ஷிஃப்ட் முறையில் நடக்கும் பாரதிதாசன் கல்லூரியை ரெகுலராக நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.