Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மினி கூப்பர் எஸ் ஜிபி

மினி நிறுவனம், மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பயர்டு எடிஷன் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் பி48 இன்ஜின்இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.6 நொடிகளில் எட்டும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. ஸ்பெஷல் எடிஷனான இது அதிகபட்சம் 30 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த மாத இறுதியில் கார்கள் டெலிவரி செய்யப்படும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. விலை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் ஸ்டாண்டர்டு வேரியண்டான ஜெசிடபிள்யூ பேக் உடன் கூடிய கூப்பர் எஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.61.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.