Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சார்பில் ரூ.100.85 கோடியிலான திட்டப்பணிகள் திறப்பு: ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூ.1,000 ஓய்வூதியம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணை, சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகிய முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர கருணை ஓய்வூதியத்தையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் சுப்பையன், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் இணை மேலாண்மை இயக்குநர் கவிதா கலந்து கொண்டார்கள்.