ராணுவத்தில் இருந்து மூன்றாம் பாலினத்தவர்களை வெளியேற்ற புதிய கொள்கை: பென்டகன் அறிவிப்பு
வாஷிங்டன்: ராணுவத்தில் இருந்து மூன்றாம் பாலினத்தவர்களை வெளியேற்றும் புதிய கொள்கையை பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு அறிவித்த பல அதிரடி அறிவிப்புகளில், ‘மூன்றாம் பாலினத்தவர்கள்’ என்ற இனமே இல்லை என்பதும் ஒன்று. ராணுவத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களை வெளியேற்றும் விதமாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து சேவையில் நீடிக்கலாமா என்பது குறித்து ராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் ராணுவ பிரிப்பு வாரியங்கள் முடிவு செய்தாலும், ராணுவ தளபதிகள் அந்த முடிவை மீறலாம் என பென்டகனின் பணியாளர்கள் மற்றும் தயார்நிலைக்கான துணை செயலாளர் ஆன்டனி டாடா தெரிவித்துள்ளார். இது வாரியங்கள் சுதந்திரமாக செயல்படும் நீண்டகால கொள்கையுடன் முரண்படான முடிவாகும். கடந்த 8ம் தேதி அனைத்து படைபிரிவுகளுக்கும் இந்த ஆணை அனுப்பப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.