பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர நேஷனல் டிபென்ஸ் அகடமி (Ntaional Defence Academy) தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த இடங்கள்: 394.
தேர்வு: National Defence Academy: (ஆர்மி-208, நேவி- 66, ஏர்போர்ஸ்-120). வயது: 01.07.2007 க்கும் 01.07.2010க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: நேஷனல் டிபென்ஸ் அகடமி பணிக்கு ஏதாவதொரு பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடற்படை மற்றும் விமானப்படை பணிக்கு இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி யால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வில் கணிதம் மற்றும் ஜெனரல் ஏபிலிட்டி பாடப்பிரிவுகளிலிருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் மதிப்பெண் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு 2026ம் ஆண்டு ஏப்.12ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி ஆகிய மையங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜனவரி 2027ல் பயிற்சி தொடங்கும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025.


