Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை ராணுவப் படை பிரிவுகளில் 2861 எஸ்ஐக்கள்

பணி: எஸ்ஐ (Sub-Inspector- Central Armed Police Force).

மொத்த காலியிடங்கள்: 2861.

படைப் பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. சிஆர்பிஎப்: மொத்த இடங்கள்: ஆண்-1006 (பொது-407, பொருளாதார பிற்பட்டோர்-101, ஒபிசி- 272, எஸ்சி-151, எஸ்டி-75). பெண்- 23 (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-2).

2. பிஎஸ்எப்: மொத்த இடங்கள்: ஆண்-212 (பொது-87, பொருளாதார பிற்பட்டோர்-21, ஒபிசி-57, எஸ்சி-31, எஸ்டி-16). பெண்-11 (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1).

3. ஐடிபிபி: மொத்த இடங்கள்: ஆண்-198 (பொது-85, பொருளாதார பிற்பட்டோர்-18, ஒபிசி-52, எஸ்சி-32, எஸ்டி-11). பெண்-35 (பொது-15, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-9, எஸ்சி-6, எஸ்டி-2).

4. சிஐஎஸ்எப்: மொத்த இடங்கள்: ஆண்-1164 (பொது-473, பொருளாதார பிற்பட்டோர்-116, ஒபிசி-314, எஸ்சி-175, எஸ்டி-86). பெண்-130 (பொது-53, பொருளாதார பிற்பட்டோர்-13, ஒபிசி-35, எஸ்சி-19, எஸ்டி-10).

5. எஸ்எஸ்பி: மொத்த இடங்கள்: ஆண்-71 (பொது-30, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-14, எஸ்சி-15, எஸ்டி-5). பெண்-11 (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4)

சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 01.08.2025 தேதியின்படி 20 லிருந்து 25க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் பட்டப்படிப்புடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் குறைந்தபட்ச உயரம்170 செ.மீ., (எஸ்டி பிரிவினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 80 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மையை பெற்றிருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. (எஸ்டி யினர் 154 செ.மீ., இருக்க வேண்டும்)

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 3.65 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 1.2 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். 4.5 மீ்ட்டர் குண்டு எறிய வேண்டும்.

பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 2.7 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். 0.9 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும்.எஸ்எஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு 2 தாள்களை கொண்டது. எழுத்துத் தேர்வில் ஜெனரல் இன்டலிஜென்ஸ் அண்ட் ரீசனிங், ஜெனரல் நாலட்ஜ் மற்றும் ஜெனரல் அவர்னெஸ், குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட், இங்கிலிஷ் காம்ப்ரிஹென்ஷன் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.முதல் கட்ட தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய மையங்களில் நவம்பர்/டிசம்பர்- 2025ல் நடைபெறும். 2ம் கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (16.10.2025).