Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய துணை ராணுவப் படைகளில் 25,487 கான்ஸ்டபிள்கள்

மொத்த பணியிடங்கள்: 25,487 (ஆண்கள்- 23,467, பெண்கள்- 2020).

அ. படை பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:

ஆண்கள்- 25,487 ( பிஎஸ்ப்-524, சிஐஎஸ்எப்- 13,135, சிஆர்பிஎப்-5,366, எஸ்எஸ்பி- 1,764, இந்தோ-திபெத் போலீஸ்- 1099, ஆயுதப்படை- 1,556, எஸ்எஸ்ப்-23).

பெண்கள்- 2020 ( பிஎஸ்எப்-92, சிஐஎஸ்எப்- 1,460, சிஆர்பிஎப்-124, இ்ந்தோ-திபெத் போலீஸ்-194, ஆயுதப்படை- 150).

இடஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.

வயது: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும்.

உடற்தகுதி: ஆண்கள்- குறைந்தபட்ச உயரம்- 170 செ.மீ., ( எஸ்டி பிரிவினருக்கு 162.5 செ.மீ). மார்பளவு 80 செ.மீ., இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர்கள் 150 செ.மீ., இருக்க வேண்டும். 1.6 கி.மீ., தூரத்தை 8½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

எஸ்எஸ்சி யால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதற்கட்ட எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், நெல்லை, கிருஷ்ணகிரி ஆகிய மையங்களில் 2026, பிப்ரவரியில் நடைபெறும்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. எஸ்சி/எஸ்டி/பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2025.