Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளன.

இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு வளைகுடா நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளதால் இந்தியாவில் இருத்து மத்திய கிழக்கு செல்லும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா, மேற்கு ஆசிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1800118797 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு இந்தியர்கள் உதவி கோரலாம். மேலும் +911123012113, +911123014104, +911123017905 ஆகிய எண்களிலும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைனில் +97339418071 என்ற எண்ணில் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.