Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

எம்ஜி விண்ட்சார் எக்ஸ்கிளூசிவ் புரோ

எம்ஜி நிறுவனம், விண்ட்சார் எக்ஸ்கிளூசிவ் புரோ என்ற டாப் வேரியண்ட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 52.9 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 449 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என அராய் சான்றளித்துள்ளது. இத்துடன் சேர்த்து விண்ட்சார் வரிசையில் மொத்தம் 5 வேரியண்ட்கள் உள்ளன. இதில் எசன்ஸ் (38 கிலோவாட் அவர்) வேரியண்டுக்கும், டாப் வேரியண்டான எசன்ஸ் புரோ (52.9 கிலோவாட் அவர்) வேரியண்டுக்கும் இடைப்பட்டதாக எக்ஸ்கிளூசிவ் புரோ உள்ளது.

6 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், 15.6 அங்குல தொடுதிரை மற்றும் 8.8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 18 அங்குல அலாய் வீல்கள் உட்பட பல அம்சங்கள் உள்ளன. இதன் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.17.25 லட்சம். இந்த கார் வாடகைக்கு பேட்டரி திட்டத்திலும் கிடைக்கிறது. அதன் ஷோரூம் விலை சுமார் ரூ.12.24 லட்சம். பேட்டரி வாடகை கிலோ மீட்டருக்கு ரூ.4.50 வசூலிக்கப்படும்.