எம்ஜி நிறுவனம், புதிய மெஜஸ்டர் எஸ்யுவி காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 2.0 லிட்டர் டிவின் டர்போ டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 215 எச்பி பவரையும் 479 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இதில் இன்டெலிஜென்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது. இது சாதாரண நிலையில் 2 வீல் டிரைவ் ஆகவும், மழை, பணி அல்லது பிடிமானம் குறைந்த சாலை பகுதிகளில் 4 வீல் டிரைவாகவும் தானாகவே மாறிக் கொள்ளும் தொழில்நுட்பமாகும்.
மொசைக் மேட்ரிக்ஸ் கிரில், டிராகன் ஐ டிஆர்எல்கள், டிரை பீம் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லாம்ப், 19 அங்குல அலாய் வீல்கள், 12.3 அங்குல டூயல் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூப், 64 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், 3 மண்டல கிளைமேட் கண்ட்ரோல், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெபிஎல் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், டூயல் வயர்லெஸ் சார்ஜர்கள், லெவல் டூ அடாஸ், 360 டிகிரி எச்டி கேமரா உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.40.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


