சான் பெட்ரோ சுலா: ஹோண்டுராஸ் நாட்டின் சான் பெட்ரோ சுலா நகரில் நடந்த கால் பந்து போட்டியில் ஹோண்டுராஸ் அணியிடம் 0-2 கோல் கணக்கில் மோசமான தோல்வியை தழுவிய மெக்சிகோ தேசிய அணியின் தலைமை கோச் ஜேவியர் அகுய்ரே மீது ரசிகர்கள் பல்வேறு பொருட்களை வீசியெறிந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்களில் ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டில் ஜேவியரின் உச்சந் தலையை பலமாக தாக்கியதில் ரத்தம் கொட்டத் துவங்கியது. இதை அடுத்து அவர், அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த ஜூலையில் நடந்த கோபா அமெரிக்கா கால் பந்து போட்டியில் மெக்சிகோ அணி மோசமாக தோற்றதை அடுத்து, அப்போதைய கோச் ஜெய்மே லொஸானோ நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக, ஜேவியர் அகுய்ரே தலைமை கோச்சாக நியமிக்கப்பட்டார்.


