Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெக்சிகன் ஓபன் டென்னிஸ் செக் வீரர் மெகாக் சாம்பியன் ஆனார்

அகாபுல்கோ: மெக்சிகன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீரர் தாமஸ் மெகாக் அபாரமாக ஆடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மெக்சிகன் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி, மெக்சிகோவின் அகாபுல்கோ நகரில் நேற்று நடந்தது. இதில் செக் குடியரசு வீரர் தாமஸ் மெகாக், ஸ்பெயின் வீரர் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் மோதினர்.

முதல் செட்டில் இரு வீரர்களும் சமபலத்துடன் மோதியதால் போட்டி கடுமையாக இருந்தது. அந்த செட்டை மெகாக் கைப்பற்றினார். 2வது செட்டை அவர் மிக எளிதில் வசப்படுத்தினார். இதனால், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று மெகாக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.4.15 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.