Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரிக்கு நேற்று முன்தினம் 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 1500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 82 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 116 கனஅடியாக அதிகரித்துள்ளது.

குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் 91.96 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 91.80 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 54.73 டிஎம்சியாக உள்ளது.