சேலம்: நாள். 30.06.2025-இன்படி, 2025-2026-ஆம் பாசன ஆண்டில், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 01.07.2025 முதல் 137 நாட்களுக்கு, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, ஆயக்கட்டு நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் முழுமையாக விளைச்சல் பெற, மேலும், தண்ணீர் வழங்கும் காலத்தை 15.11.2025 முதல் 15.01.2026 முடிய, நாள் ஒன்றுக்கு 400 கன அடி / வினாடி வீதம் 62 நாட்களுக்கு காலநீட்டிப்பு செய்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் உள்ள ஆறு (6) பழைய இராஜ வாய்க்கால்களின் (குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) 4686 ஏக்கர் பாசன நிலங்களின், 2025-2026-ஆம் ஆண்டு, இரண்டாம் போக பாசனத்திற்காக, அமராவதி ஆற்று மதகு வழியாக 15.11.2025 முதல் 28.02.2026 வரை, 105 நாட்களில், 40 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில் வினாடிக்கு 200 கன அடி வீதம் 691.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தகுந்த இடைவெளி விட்டு, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
