Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஓர் ஆண்டு காலமாக ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்கத் திட்டம்!!

சென்னை : சென்னை சர்வதேச விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை அமைக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருப்பது, சென்னை தெற்கு புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை விமான நிலையம் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.9 ஆயிரத்து 335 கோடி செலவில் 13 உயர்மட்ட ரயில் நிலையங்களுடன் அமைய இருக்கிறது.

இதற்கான விரிவான திருத்தப்பட்ட திட்ட அறிக்கை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு சமர்ப்பித்து 11 மாதங்கள் ஆனபோதிலும் இன்னும் ஆய்விலேயே உள்ளது. இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கை இன்னும் முதற்கட்ட ஆய்விலேயே உள்ளது என்ற பதில் தெரியவந்துள்ளது. இதேபோல் திட்ட அறிக்கை சமர்ப்பித்த 4 மாதங்களில் பாட்னா மெட்ரோவுக்கும், 7 மாதங்களில் அகமதாபாத் மெட்ரோவுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. ஓர் ஆண்டு காலமாக ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்கத் திட்டம் காத்திருப்பது சென்னை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.