Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முரசு புயலாக வலுப்பெற்றது: திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முரசு புயலாக வலுப்பெற்றது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளதும், இது நாளை மறுநாள் முரசு புயல் ஆந்திராவில் கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03-11-2026: கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்; அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. இடி, மின்னல், பலத்த காற்று மற்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது.